சிவ பூஜையில் கரடி புகுந்தாற்போல என்று கிராமிய பேச்சுவழக்கு ஒன்றுள்ளது. ஆனால் அம்மன் பூஜையில் யானை புகுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆம். தாயாகிய அம்மனைத்தேடி பிள்ளையாகிய விநாயகர் வந்த நிகழ்வாக கருதப்படுகின்றது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நேற்றைய (12)இரவு நேர மண்டலாபிஷேகபூஜை யின் பொழுது யானை ஒன்று திடீரென
உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இரவு 8 மணியளவில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஷ்வர குருக்கள் ஆலயத்தில் யாக பூஜையை நடாத்தி கொண்டிருக்கையில் திடீரென யானை உள் நுழைந்தது. பக்தர்கள் அரோகரா கோசமிட்டபடி வணங்கினர்.
பிள்ளையார் பரிவாரக் கோயில் அமைந்துள்ள சூழலில் சுமார் அரை மணி நேரம் வரை அட்டகாசம் செய்தது. எனினும் யாருக்கும் எந்த பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தவில்லை.
பின்னர் ஒருவாறு பின்வாங்கி வந்த வழியில் திரும்பி சென்றது.
நேற்றைய தினத்தில் இருந்து மண்டலாபிஷேக பூஜைகள் தினமும் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி 5.30 மணிக்கு நிறைவு செய்ய வேண்டும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment