திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் நடுத்தீவு மஸ்ஜிதுர் றஹ்மான் ஜும்ஆ பள்ளியின் பிரதான நுழைவாயில் திறப்பு விழா மற்றும் முன்னாள் தலைவர்கள் கௌரவிப்பு என்ற இரு பிரதான நிகழ்வுகள் (17) பி.ப.04.30 மணியவில் பள்ளி வளாகத்தில் தலைவர் எஸ்.எம்..முஜீப் தலைமையில் நடைபெற்றது.
மிக நீண்டகாலமாக மஸ்ஜிதுர் றஹ்மான் ஜும்ஆ பள்ளிக்கான அழகிய முறையிலான பிரதான நுழைவாயில் அமையப் பெறாமை ஒரு பெரும் குறைபாடாக நிலவி வந்தது. இதனை நிவர்த்திக்க கடந்தகால நிருவாகத்தினர் பல பிரயத்தனங்களை மேற்கொண்டபோதும் அது கைகூடவில்லை.
இதனால் எப்போதும் எந்தவொரு வேலைத் திட்டத்தையும், நேர்த்தியாகவும் ,நேர்மையாகவும் தூரநோக்கு இஸ்லாமிய சிந்தனையோடும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு செயல்டும் தலைர் முஜீப் அவர்கள் நிருவாகத்தைப் பொறுப்பேற்றது முதல் இப்பணியை ஒரு சவாலாக ஏற்று எப்படியாவது இவ்வருட இறுதிக்குள் இதனை நிறைவு செய்து காட்டுவேண்டும் என்ற தூர நோக்குப் பயணத்தோடு இணைந்த நிருவாக சபையினரின் அர்ப்பணிப்புடனான தொடர் முயற்சியின் காரணமாக சாதித்துக் காட்டியுள்ளார்.
இவ்வேலைத்திட்டம் மகல்லா மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்று வருகின்றது.
அத்தோடு முன்னாள் தலைவர்களான அல் ஹாஜ் கே.எம். ஜுனைது, அல் ஹாஜ் .எம்.கே. மஹதிக், மற்றும் அல் ஹாபிழ் கலாநிதி எல்.எம்.முபீத் ஆகியோர்களுக்கான பொன்னாடைகள் போர்த்தி நினைவுச் சின்னங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து முன்னாள் தலைவர் மர்ஹூம் எம்.பிள்யூ. அப்துல் சமது அவர்களின் நினைவாக அன்னாரின் குடும்பம் சார்பாக ஏ.எஸ்..நபீக் ஆசிரியர் அவர்களின் தலைமையில் அதிதிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வும் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
0 comments :
Post a Comment