இலங்கை சமாதான கற்கைகளுக்கான நிலையம் ஒழுங்கு செய்திருந்த சர்வதேச கல்வி, சுற்றுலா தொடர்பான ஆராய்ச்சி மாநாடு அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
சமாதான கற்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலையான அபிவிருத்திக்கு, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பங்காற்றிய கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபையிர் இம்மாநாட்டின் போது சமாதான தூதுவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப், முன்னாள் அமைச்சர் அலிசாஹிர் மௌலானா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு கல்வியலாளர்கள், புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தொண்டர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, சமாதான கற்கைகள் நிலையம் இவ்வாறான விருதுகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment