சிங்கள மொழி பாடநெறியினை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களின் பிரியாவிடை



சியாத்.எம். இஸ்மாயில்-
ட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் சிங்கள மொழி பாடநெறியினை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு பிரதம முகாமைத்து சேவை உத்தியோகத்தர் எம்.ஏ.சி.முகம்மட் றகீப் ஒருங்கிணைப்பில் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டலில் நேற்று (31) நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் 60 அரச உத்தியோகத்தர்கள் இப்பாடநெறியினை பூர்த்தி செய்துள்ளதுடன் அவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதுடன், போதனாசியர் எஸ். பாக்கியரட்ணத்துக்கு பொன்னாடை மற்றும் நினைவுச்சின்னம், பரிசு மற்றும் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர்களுக்கும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவமளிக்கப்பட்டது.

நாட்டின் நிர்வாகத்துறையினை சிறப்பாக முன்னெடுக்கும் வகையிலும், சகல இன மக்களிடத்திலும் மொழி வழியிலான சமாதானம், ஐக்கியம், இன ஒற்றுமையை கட்டியெழுப்பும் வகையிலும், அரச உத்தியோகத்தர்களை இரு மொழிப் பயன்பாட்டிற்கு தேர்ச்சி பெறச் செய்யும் நோக்கில், தமிழ் பேசும் அரச ஊழியர்களுக்கு சிங்கள பாடநெறி அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இவ்வாறான பாடநெறிகள் அம்பாறை மாவட்டத்தில் பல அலுவலகங்களிலும் திணைக்களங்களிலும் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :