காரைதீவு பிரதேச செயலகத்தின் கணக்காளராக ஏ.எல்.எப்.றிம்சியா அர்சாட் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
காரைதீவு பிரதேச செயலக கணக்காளராக கடமையாற்றிய என்.ஜெயசர்மிகா இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து காரைதீவு பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளராக ஏ.எல்.எப்.றிம்சியா அர்சாட் தமது கடமைகளை நேற்று (25) பொறுப்பேற்றுக் கொண்டார்.
இறக்காமம் பிரதேச செயலகத்தில் கணக்காளராக கடமையாற்றிய நிலையில் இடமாற்றம் பெற்ற ஏ.எல்.எப்.றிம்சியா அர்சாட் அவர்களை வரவேற்கின்ற நிகழ்வு காரைதீவு பிரதேச செயலகத்தில்,பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற்து.
இதன் போது இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.ரஷ்ஷான் ,காரைதீவு ,இறக்காமம், பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர்கள்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் வர்த்தகத்துறை பட்டப்படிப்பில் விசேட சிறப்புத் தேர்ச்சி பெற்று, இலங்கை கணக்காளர் சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து இறக்காமம் பிரதேச செயலகத்தில் கணக்காளராக சுமார் 8 வருடங்கள் கடமையாற்றி நிலையில்,இடம்மாற்றம் பெற்ற ஏ.எல்.எப்.றிம்சியா காரைதீவு பிரதேச செயலகத்தில் இவர் கணக்காளராக பதவியினை பொறுப்பெற்றுக் கொண்டதுடன்,பதில் கணக்காளராகவும் இறக்காமம் பிரதேச செயலகத்தில் செயற்படும் வண்ணம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment