புதிய உறுப்பினராக றமிஸ் நியமனம்.



காரைதீவு நிருபர் சகா-
ம்மாந்துறை பிரதேச சபையின் ஸ்ரீ.ல.சு.கட்சி உறுப்பினர் வை.பி.எம். முஸம்மில் உறுப்பினர் பதவியில் இருந்து கட்சியால் நீக்கப்பட்டதை அடுத்து, அவ்விடத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளரும் ,சம்மாந்துறை பிரதேசத்தின் பிரபல வர்த்தகருமான அப்துல் ஹமீட் அன்வர் (றமிஸ்) புதிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் தயாசிறி ஜயசேகர நேற்று கட்சி தலைமையகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

அச் சமயத்தில், சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளருமான ஏ.அச்சிமொகமட், சபையின் முன்னாள் உப தவிசாளரும், கட்சியின் மாவட்ட அமைப்பாளருமான வெ.ஜெயச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :