கனடா அரச பல்கலைக்கழகமான பிளேமிங் (FLEMING) பல்கலையில் கல்வியைத் தொடர்வதற்கு மாணவர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வு காத்தான்குடி பீஜ் வே ஹோட்டலில் இடம்பெற்றது.
ஐசிஎச்எஸ் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவரும் சட்டமுதுமாணியுமான மிப்ராஸ் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, கனேடிய அரச பல்கலைக்கழகமான பிளேமிங் கல்லூரியின் சர்வதேச கற்கைநெறிகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர் பேராசிரியர் பீட்டர் பொன்டி மற்றும் அக்கல்லூரியின் கிழக்காசியாவுக்குப் பொறுப்பான பணிப்பாளர் சமீர்ஜாவிட் மற்றும் ஐசிஎச்எஸ் கல்லூரியின் சட்ட ஆலோசகரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அபூசாலிஹ் உவைஸ் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டதுடன் கனடாவின் அரச பல்கலைக்கழகமான பிளேமிங் கல்லூரியின் பல்வேறு கற்கைநெறிகள் சம்பந்தமான தெளிவு மற்றும் எவ்வாறு அந்தப் பல்கலையில் நுழைவைப் பெற்றுக் கொள்வது சம்பந்தமான விடயங்களும் கருத்தரங்கின் மூலமாக அப்பல்கலையின் பிரதிநிதிகள் மாணவர்களுக்குத் தெளிவுபடுத்தினர்.
இலங்கை மாணவர்களுக்கான இலங்கை மருத்துவ பேரவையின் (SLMC)அங்கீகாரம்பெற்ற மருத்துவப்பல்கலைக்கழகங்கள் மற்றும் பொறியியல், விமானப்பொறியியல் போன்ற 100க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புக்களை 28 நாடுகளின் பல்கலைக்கழகங்களுடன் இணைப்புச்செய்யப்பட்ட ICHS சர்வதேச பட்டயக்கற்கைகள் கல்லூரி நம்காலடிக்கே வந்துள்ளது எமது வரப்பிரசாதம். எனவே, நமது பிரதேச மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான பல்வேறு முயற்சிகளை இந்தக் கல்லூரி புரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
கனடா செல்ல ஆர்வமான மாணவர்கள் ஐசிஎச்எஸ் கல்லூரியின் 077 616 1241 என்ற தொலைபைசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்வதன் மூலம் மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
0 comments :
Post a Comment