வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் பிறந்து இருக்கின்ற சுபகிருது புத்தாண்டு வருட பிறப்பை முன்னிட்டு இன்று(14) வியாழக்கிழமை காலை புத்தாண்டு விசேட பூஜை நடைபெற்றது .
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஷ்வர குருக்கள் பிரதான ஆலயத்தில் விசேட பூஜை நடத்தினார் .தொடர்ந்து பாரம்பரிய மரபுரீதியாக கண்ணகை அம்மன் ஆலயத்தில் கப்புகனார் புத்தாண்டு பூஜையை நடத்தினார்.
அதன்தொடர்ச்சியாக அம்பாளின் கைவிசேஷம் இடம்பெற்றது .
ஆலய தர்மகர்த்தாக்கள் அமர்ந்து பக்தர்களுக்கு அந்த கை விசேஷத்தை வழங்கினார்கள். ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று கை விசேஷத்தை பெற்றுக் கொண்டார்கள்.
0 comments :
Post a Comment