ராஜினாமாக் கடிதங்களை பிரதமரிடம் கையளிப்பதால் சட்டப்பிரச்சினை ஏதும் இல்லை என்று சட்ட முதுமாணி வை. எல். எஸ். ஹமீட் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி, அசாதாரண சூழ்நிலை தொடர்பில் அமைச்சர்கள் பதவி விலகிய கடிதத்தினை பிரதமரிடம் கையளித்திருப்பதால் அது செல்லுபடியாகுமா என்பது தொடர்பில் தற்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகம் விடயமாக இன்று (04) கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் குறிப்பிடும்போது,
“அமைச்சர்கள் ராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடமே கையளிக்க வேண்டும்; பிரதமரிடம் கையளித்தால் அது ராஜினாமாக் கடிதமாகாது” என்று முன்வைக்கப்படுகின்ற கருத்து அரசியலமைப்புடன் உடன்படவில்லை.
அரசியலமைப்பின் பிரகாரம் “ ராஜினாமாக் கடிதங்கள் ஜனாதிபதிக்கு “முகவரி இடப்பட்டிருத்தல்” வேண்டும். அதனை ஜனாதிபதியிடம் கையளிக்கலாம்; பிரதமரிடம் கையளிக்கலாம்; ஜனாதிபதியின் அதிகாரிகளிடம் கையளிக்கலாம்; தபாலில்கூட அனுப்பிவைக்கலாம். அது ஜனாதிபதியை அடைந்தால் சரி என்பதே சட்டத்திற்குட்பட்ட நிலையாகும்.
எனவே, ராஜினாமாக் கடிதங்களை பிரதமரிடம் கையளிப்பதால் சட்டப்பிரச்சினை ஏதும் இல்லை என்பது தெளிவாகிறது என்றார்.
0 comments :
Post a Comment