அரசுக்கெதிராக கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் எதிர்ப்பு போராட்டம்


பாறுக் ஷிஹான்-
ல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தின் முன்னால் கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் பங்குபற்றிய மின்சார தடை மற்றும் எரிடிபாருள் தட்டுப்பாடு, அத்தியவசிய பொருட்களின் விலை ஏற்றம் போன்றவற்றுக்கு எதிர்ப்புக்கும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை(10) ஆராதனையின் பின்னர் இடம்பெற்றது.

இப்போராட்டமானது கல்முனை திரு இருதயநாதர் ஆலய பங்குத்தந்தை அருளானந்தன் தேவதாஸன் தலைமையில் காலை இடம்பெற்றதுடன் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.

இதன் போது போராட்டகாரர்கள் நிர்வாகத்தை சரியாக செய்யுங்கள் ,மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள் ,வினை விதைத்தவன் வினையறுப்பான் ,குடும்ப ஆட்சி வேண்டாம் மக்கள் ஆட்சியே வேண்டும், காலால் உதைக்காதீர்கள் கைகொடுக்கும் தெய்வமாக மாறுங்கள், மக்கள் சேவை மகேசன் சேவை என அறிந்து கொள்ளுங்கள், என அரசுக்கு எதிராக பல்வேறு சுலோகங்கள் தாங்கியவாறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேவேளை குறித்த போராட்டத்திற்கு பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :