IOC & CEPETCO பாடல்
++++++
Mohamed Nizous
நான் கூட்ட நினைப்பதெல்லாம் நீ கூட்ட வேண்டும்
நாள் தோறும் ரோட்டோரம் கியூ காண வேண்டும் கியூ காண வேண்டும்
நாடாளும் ஆளும் உலக்கையன்கள்
நமை வாழ்த்த வேண்டும்
நமை வாழ்த்த வேண்டும்
பாடவதிப் பட வைத்து
பணம் சேர்க்க வேண்டும்
பணம் சேர்க்க வேண்டும்
உள் நாட்டில் களஞ்சியங்கள்
உனக்காக வேண்டும்
உனக்காக வேண்டும்
இல்லாத டீசலுக்காய்
இவர் வாட வேண்டும்
இவர் வாட வேண்டும்
மனதாலும் நினைவாலும்
நாயாக வேண்டும் பேயாக வேண்டும்
மடி ஏந்தி கடன் கேட்கும்
நிலை தோன்ற வேண்டும் நிலை தோன்ற வேண்டும்
அடித்தாலும் சுருட்டினாலும்
ஆர் இங்கே கேட்பார்
ஆர் இங்கே கேட்பார்
சும்மா நாம் உழைப்பதற்கு
சுகமான நாடு
சுகமான நாடு
கண்மூடி இருளோடு
விலை கூடும் நாட்டில்
விலை கூடும் நாட்டில்
கபுட்டாக்கள் மட்டும்
கலங்காது இருக்கும்
கலங்காது இருக்கும்
நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்
0 comments :
Post a Comment