19 + 20 ஐ உள்ளடக்கியே '21' முன்வைப்பு!



ஆர்.சனத்-
19 + 20 ஐ உள்ளடக்கியே '21' முன்வைப்பு!
ஜனாதிபதி அமைச்சு பதவிகளை வகிக்கலாம்
இரண்டரை வருடங்களில் நாடாளுமன்றை கலைக்கலாம்
மத்திய வங்கி ஆளுநர் நியமனத்தில் 'கட்டுப்பாடு'
உயர்நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையில் மாற்றமில்லை
21 ஐ மீள திருத்தி அமைக்கவும் நடவடிக்கை

ரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை வெகுவிரைவில் நிறைவேற்றிக்கொள்வதற்கும், அதற்கான நகர்வுகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தச் சட்டமூலத்தை கையாளுவதற்காக நியமிக்கப்பட்ட குழு நேற்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடியது.
இதன்போது நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவால் தயாரிக்கப்பட்டுள்ள 21 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து விரிவாக ஆராயப்பட்டு, அதனை அமைச்சரவையில் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று மாலை கூடியபோது, உத்தேச 21 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.
21 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய உத்தேச சட்டமூலம், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இன்று வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள், கட்சிகளின் யோசனைகள் உள்வாங்கப்படும். வெள்ளிக்கிழமை கட்சி தலைவர்களை, நிதி அமைச்சர் சந்தித்து பேச்சு நடத்துவார்.
அதன்பின்னர், திருத்தப்பட்ட 21 ஆவது திருத்தச்சட்டம், அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்படும்.
இரட்டை குடியுரிமை கொண்டவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு தடை விதிக்கும் யோசனை உத்தேச சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 19 மற்றும் 20 ஆவது திருத்தச்சட்டங்களில் உள்ள சிறப்பு ஏற்பாடுகளை உள்ளடக்கிய வகையில் முன்வைக்கப்பட்டுள்ள 21 ஆவது திருத்தச்சட்டமூலம் அமையுமென கூறப்பட்டாலும், ஜனாதிபதி அமைச்சு பதவிகளை வகிப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
" 19 ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் ஜனாதிபதி தனக்கு எந்தவொரு அமைச்சுக்கான விடயதானங்களையும் செயற் பாடுகளையும் ஒதுக்குவதைத் தடுக்கிறது. ஆனால் 21 ஆவது திருத்தம் அத்தகைய த டு ப் பு ஏற்பாடுகள் உ ள் ள ட க் கவில்லை. எனவே ஜனாதிபதி தொடர்ந்தும் அமைச்சுக்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், எந்தவொரு விடயதானங்க ளையும் செயற்பாடுகளையும் தனக்கு ஒதுக்கிக் கொள்ளவும், எந்தவொரு அமைச்சரின் விடயதானங்களையும் செயற்பாடுகளையும் எடுத்துக் கொள்ள வும் முடியும்." -என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, 19 இல் இருந்த அந்த ஏற்பாடு 21 இலும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற யோசனையையும் முன்வைத்துள்ளது.
அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான தினத்திலிருந்து நான்கரை வருடங்கள் சென்ற பிறகே ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்கமுடியும் என்ற ஏற்பாடு இருந்தது.
20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக இந்த ஏற்பாடு இரண்டரை வருடங்கள் ஆக்கப்பட்டது. 21 இல் இந்த விடயம் மாற்றப்படவில்லையென தெரியவருகின்றது.
மத்திய வங்கி ஆளுநர் நியமனமும், அரசமைப்பு பேரவை ஊடாகவே , இடம்பெற வேண்டும் என்ற முக்கிய விடயம் 21 இற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.
20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக உயர்நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அந்த எண்ணிக்கை 21 இல் மாற்றப்படாது.
அதேவேளை, 19 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார். அத்துடன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தமது கட்சியால் முன்வைக்கப்பட்டுள்ள 21 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவருமாறும் சஜித் கோரிக்கை விடுத்தார்.
சட்டத்தரணிகள் சங்கத்தால் 21 ஆவது திருத்தச்சட்டத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ள முக்கியமான சில பரிந்துரைகள் வருமாறு,
1. நாணயச் சபையின் உறுப்பினர்கள் அரசமைப்புப் பேரவையின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட வேண்டும.
2. அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண ஆளுநர்கள், வெளிநாட்டுத்தூதுவர்கள் மற்றும் தூதரகத் தலைவர்கள் போன்றோர் அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து பிரதமரின் ஆலோசனையுடன் நியமிக்கப்பட வேண்டும்.
3. அரசமைப்புச் சபையின் பரிந்துரைக்கமைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சட்ட ரீதியான ஒரு அமைப்பு மூலம் ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கள் சிபார்சு செய்யப்பட வேண்டும்.
4. நிதி சுதந்திரம், வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகி யவற்றை மேம்படுத்துவதற்கான ஏற்பாடுகள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :