கல்முனை அல்-அமீன் முன்பள்ளிப் பாடசாலையின் 22ஆவது வருடாந்த விடுகை விழா, சனிக்கிழமை (14) மாலை ஆசாத் பிளாஸா மண்டபத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
அல்-அமீன் சமூக சேவை நிலையத்தின் தலைவர் எம்.எம்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் பிரதம அதிதியாகவும் கல்முனை வலய முன்பள்ளிப் பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.ரஸீன், மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பைரூஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது முன்பள்ளிச் சிறுவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகள் பல இடம்பெற்றதுடன் முன்பள்ளியில் கற்று வெளியேறும் அனைத்து சிறுவர்களும் அதிதிகளினால் பட்டச்சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
அதேவேளை கடந்த 22 வருடங்களாக கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் 06 முன்பள்ளிகளை சிறப்பாக நடத்தி, சிறுவர்களின் ஆரம்பக் கல்விக்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்ற அதன் தலைவர் எம்.எம்.மன்சூர், கல்முனை மாநகர முதல்வரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். அத்துடன் கற்பிக்கும் ஆசிரியர்களும் இதன்போது நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளும் முன்பள்ளி பாடசாலை சமூகத்தினரால் நினைவுச் சின்னங்கள் வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment