ஐ.தே.க. படுதோல்வி அடைந்த நாள் மே - 27!
70 இல் மண்டியிட்டு 77 இல் வெற்றிநடை! வரலாறு மீள திரும்புமா?
இலங்கை அரசியல் வரலாற்றில் 1947 முதல் 2020 ஆம் ஆண்டுவரை, 16 பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில் எட்டு தேர்தல்கள் தொகுதி முறைமையிலும் , எட்டு தேர்தல்கள் (1989 முதல்) விகிதாசார அடிப்படையிலும் இடம்பெற்றுள்ளன.
இலங்கையில் 1947 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது பாராளுமன்றத் தேர்தலில், வெற்றிபெற்ற ஐக்கிய தேசியக்கட்சி, 1956 இல் நடைபெற்ற தேர்தலிலும் வெற்றிநடைபோட்டது. 1956 இல் தோல்வியை சந்தித்தது. அக்கட்சியால் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறமுடிந்தது. (இதுவே ஐ,தே.கவுக்கு ஏற்பட்ட முதலாவது படு தோல்வி)
இலங்கையில் நான்காவது பாராளுமன்றத் தேர்தல் 1960 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அவ்வாண்டில் இரு தடவைகள் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது.
1960 மார்ச் 19 ஆம் திகதி நடைபெற்ற 4ஆவது பொதுத்தேர்தலில் இரு பிரதான கட்சிகளும் ஆட்சியமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மையை பெறாததால் 50 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த ஐக்கிய தேசியக்கட்சி சிறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
பிரதமராக டட்லி சேனாநாயக்க பதவியேற்றார். சிம்மாசன உரை வாக்கெடுப்புக்குவிடப்பட்டபோது ஐக்கிய தேசியக்கட்சி ஆடசி கவிழ்ந்தது.
இதனால் 24 நாட்களுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. (1960 ஏப்ரல் 23 ஆம் திகதி) 1960 ஜீலை 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
நாட்டில் 1947, 1952, 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது தேர்தல் திகதியாக மூன்றிற்கும் மேற்பட்ட நாட்கள் அறிவிக்கப்பட்டுவந்த நிலையில் 1960 மார்ச்சில் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போதே ஒரே நாளில் வாக்களிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர் 1965 இல் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்றது.
எனினும், 1970 மே 27 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாவது படுதோல்வியை சந்தித்தது. 17 ஆசனங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றன.
( அப்போது நாடாளுமன்றத்தில் ஆறு நியமன எம்.பிக்கள் உட்பட மொத்தம் 157 பேர் அங்கம் வகிப்பார்கள்.60 இற்கு முன்னர் 101 எம்.பிக்களே இருந்தனர். )
அதன்பின்னர் 1977 இல் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது.
அதன்பின்னர் 2000, 2004, 2010 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்விகளை சந்தித்திருந்தாலும், 70 இல் ஏற்பட்ட நிலைமை ஏற்படவில்லை.
எனினும், ஐக்கிய தேசியக்கட்சி பிளவுபட்டதால், 2020 இல் நடைபெற்ற தேர்தல்தான் அக்கட்சிக்கு மரண அடியாக அமைந்தது. தேசியப்பட்டியல் ஊடாகவே ஓர் ஆசனம் கிடைக்கப்பெற்றது. அந்த ஓர் ஆசனத்தை வைத்து அக்கட்சி இன்று பிரதமர், பதவியையே கைப்பற்றியுள்ளது.
70 இல் மண்டியிட்டு ,77 இல் மீண்டெழுந்த ஐக்கிய தேசியக்கட்சி, 2020 இல் படுதோல்வியை சந்தித்து, 2025 இல் மீண்டெழுமா?
0 comments :
Post a Comment