ஏறாவூர் நகரசபையின் 50ஆவது மாதாந்த சபை அமர்வு!

ஏறாவூர் சாதிக் அகமட்-

ஏறாவூர் நகரசபையின் 50ஆவது மாதாந்த சபை அமர்வு இன்று நகரசபையின் சபா மண்டபத்தில்  தவிசாளர் எம்.எஸ்.நழீம்  தலைமையில் இடம்பெற்றது.

இறைவணக்கத்துடன் ஆரம்பமான கூட்டத் தொடரில் சமூகமளித்த  உறுப்பினர்களை வரவேற்ற   முதல்வர்,  இன்றைய காலகட்டத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள  பொருட்களின் தட்டுப்பாடு விலையேற்றம் என்பவற்றினால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்றும், தற்போது பொருட்களின் விலை 3 மடங்காக அதிகரித்துள்ள இவ்வேளையில்  வர்த்தகர்கள், அன்றாட தொழிலாளர்களின் நிலைமை காலத்திற்கு ஏற்றாபோல் சென்று கொண்டிருக்கின்ற இந் நிலையில் அரச உத்தியோகத்தர்கள் அதே சம்பளத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே எமது நாட்டின்  பிரதம மந்திரி அவர்களினால் கொண்டுவரப்பட இருக்கின்ற வரவு செலவு திட்டத்தில் ஏழைகளின் வாழ்வாதாரம், அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பு என்பன உள்வாங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கடந்த 10-05-2022 அன்று இடம்பெற்ற அசம்பாவிதம் எமது மார்க்கத்திற்கு ஒவ்வாத விடயமாகும் ஒருவருடைய பொருளாதாரம் தீ வைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட விடயத்தை இந்த சபை வன்மையாக கண்டிக்கின்றது.  இவ்விடயத்தில் பொலிஸார் நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட  வேண்டும் என்றும் அப்பாவிகள்  கைது செய்யப்பட்டிருந்தால்  விடுவிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

எமது பகுதியில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது ஆகவே எமது பகுதியில் வட்டார ரீதியாக சிரமதானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது. என்றும் தனது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

அதனை தொடர்ந்து 

1-  உறுப்பினர் எஸ்.எம்.ஏ.எஸ்.எம். சறூஜினால்   கடந்த 10-05-2022ஆம் திகதி இடம் பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பான பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டு  ஆராயப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

02- சென்ற 2022 ஏப்ரல் மாத சபைக் கூட்டறிக்கையினை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்பட்டு  ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

03- 2022 ஏப்ரல் மாத வரவு செலவுகளை சபையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

04- நிதி மற்றும் கொள்கை உருவாக்கம் குழுவின் சிபார்சுகள் சபையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

05- தொழில் நுட்ப மற்றும் பௌதீக திட்டமிடல் குழுவின் சிபார்சுகள் சபையின் அங்கீகாரத்திற்காக சபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

06- சுற்றாடல் வாழ் வசதிகள் குழுவின் சிபார்சுகள் சபையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்பட்டு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

07- வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி குழுவின்  சிபார்சுகள் சபையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்பட்டு ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

1- டெங்கு நோயின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் 10 வட்டாரங்களிலும் 10 நாட்கள் வட்டார  உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் சிரமதானம் மேற் கொள்ளுதல் தொடர்பாக ஆராயப்பட்டு தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

02- புன்னக்குடா வீதியிலுள்ள விளம்பரப் பலகையில் (ஏற்கனவே அமானா வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளதற்கமைவாக) ஏனைய வர்த்தக நிலையங்களின் விளம்பரங்களை காட்சிப்படுத்துவதற்கு அனுமதி வழங்குவது என தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

03- எமது ஊரின் நலன் கருதி தீயணைப்பு வாகனம் ஒன்றினை கொள்வனவு செய்வது தொடர்பாக  ஆராயப்பட்டு தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

04- எமது வாவிக்கரை சிறுவர் பூங்காவில் உரிய பாதுகாப்பு வசதிகளுடன் மீளவும் படகுச் சேவையை ஆரம்பிப்பது தொடர்பாக ஆராயப்பட்டு தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

05- எமது வாவிக்கரை சிறுவர் பூங்காவில் வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களில் விளம்பர சேவைகளை ஒலி ஒளிபரப்பு செய்வதென தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

06- எமது நகரசபை எல்லைக்குள் சேதமடைந்து காணப்படுகின்ற பெயர்ப் பலகைகளை திருத்தம் செய்வதென தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

07- இறைச்சிக் கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்துவதென தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

8- வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கலாச்சார மண்டபத்திற்கு முன்பாகவும் எமது திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவிலும் வாகனத் தரிப்பிடங்களை அமைத்து கட்டணங்கள் அறவீடு செய்தல் தொடர்பாக ஆராயப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

(வெளியூரை சேர்ந்தவர்களும், எமது ஊரைச் சேர்ந்தவர்களும் தங்களது வாகனங்களை தரித்து வைப்பதற்குரிய தரிப்பிட வசதியின்மையால் வீதியோரங்களில் தரித்து வைக்கின்றனர். இதனை கருத்திற் கொண்டு வாகன தரிப்பிடங்களை ஏற்படுத்திக் கொடுப்பதென தீர்மானிக்கப்பட்டது)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :