நுவரெலியாவில் 6ம் திகதி பல இடங்களில் போராட்டம்



தலவாக்கலை பி.கேதீஸ்-
சிரியர் விடுதலை முன்னணி ஏனைய ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் இணைந்து எதிர்வரும் 6ம் திகதி வெள்ளிக்கிழமை நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் அரசுக்கெதிராக கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் அனைத்து ஆசிரியர்களும் ஒன்றிணைந்து எரிபொருள் விலையேற்றம்,அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் என்பவற்றைக் கண்டித்து இந்த மாபெரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். அந்தவகையில் நுவரெலியா,தலவாக்கலை,கொட்டக்கலை,டயகம,ஹோல்புறூக்,அட்டன்,நோர்வூட்,மஸ்கெலியா,பொகவந்தலாவ,கினிகத்தேன,வலப்பனை,ஹங்குராங்கெத்த மற்றும் கொத்மலை ஆகிய நகரங்களில் ஆசிரியர் விடுதலை முன்னணி ஏனைய ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டங்களிலும் ஆர்ப்பாட்ட பேரணிகளிலும் ஈடுப்படவுள்ளது. இந்த அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்க்கும் வரை எமது போராட்டங்கள் ஓய்வதில்லை என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :