எமது புனித இஸ்லாம் மார்க்கம் காட்டிய வழியில் முஸ்லிம்கள் அனைவரும் சமூக ஒற்றுமையுடன் தேசிய ஐக்கியத்திற்கு முன்னுரிமையளித்து செயற்படுவோம் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று எம்மை புடம்போட்டுக் கொண்டு இறைவனின் திருப்பொருத்தத்தையும் இறையச்சத்தையும் அடைந்து கொண்ட நாம் தொடர்ந்தும் பாவங்களை தவிர்ந்து கொண்டு, வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு, மறு உலகின் சுவன வாழ்வுக்காக எம்மை தயார்படுத்திக் கொள்வோம்.
பொருளாதார நெருக்கடி மிக்க இந்த இக்கட்டான காலகட்டத்தில் விலைவாசி உயர்வுடன் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்ற சூழ்நிலையில், பொறுமை, சகிப்புத்தன்மையுடன் நாம் அந்த சவால்களுக்கு முகம்கொடுப்பதுடன் ஏழை, எளியவர்களுக்கு உதவுவதற்கும் முன்வருவோம்.
அத்துடன் நாட்டு நிலைமைகள் சீராகி, மக்களின் கஷ்டங்கள் நீங்கி, நிம்மதி, சந்தோசமான எதிர்காலம் மலரப் பிரார்த்திப்போம்.
வல்ல இறைவனால் மாத்திரமே எமது நிலைமைகளை சீராக்க முடியும் என்கிற நம்பிக்கையை நாம் எந்த சந்தர்ப்பத்திலும் மறந்து விடக்கூடாது.
மேலும், முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் சமத்துவம், சகவாழ்வைக் கருத்தில் கொண்டு மாற்று இனங்களுடன் ஐக்கியமாக வாழ்வதற்கும் தாய் நாட்டுக்காக உழைப்பதற்கும் இப்புனிதத் திருநாளில் திடசங்கற்பம் பூணுவோம்.
அனைத்து இஸ்லாமிய நெஞ்சங்களுக்கும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். ஈத்முபாரக்.
0 comments :
Post a Comment