ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் நாடாளுமன்ற அரசியல் பயணம்….!



ஆர்.சனத்-
'1998 - ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ருவன்வெல்ல தொகுதி அமைப்பாளராக நியமனம்.
'2000 - நாடாளுமன்ற அரசியல் பயணம் ஆரம்பம். கேகாலை மாவட்டத்தில் களமிறங்கி, 49,585 வாக்குகளுடன் வெற்றிநடை. 2001 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் வெற்றிமகுடம் சூடி சபைக்கு தெரிவு.
'2004 - பொதுத்தேர்தலில் 80, 236 வாக்குகளைப் பெற்று மீண்டும் சபைக்கு வருகை.. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சு பதவியும் வகிப்பு.
'2007- நிதி மற்றும் அரச வருமான அமைச்சராக பதவியேற்பு.
'2010 - பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் போட்டி, 146,623 விருப்பு வாக்குகளுடன் பெரு வெற்றி.
'2015 - பொதுத்தேர்தலிலும் வெற்றிலை சின்னத்தில் களமிறங்கி வெற்றிநடை.
'மைத்திரி அணி உறுப்பினர் என்பதால், விருப்பு வாக்கு பட்டியலில் நான்காவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார். (62,098 வாக்குகள்)
'தேசிய அரசு உதயமானதால், மைத்திரி - ரணில் ஆட்சியில் அமைச்சு பதவி வகிப்பு.
'2020 - மொட்டு சின்னத்தில் போட்டி. 103,300 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் தெரிவு.
'2020 - பிரதி சபாநாயகராக ஏகமனதாக தெரிவு.
'2022.04. 30 - பிரதி சபாநாயகர் பதவி துறப்பு.
'2022. 05. 05. - பிரதி சபாநாயகருக்கான தேர்வில் வெற்றி. 148 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிப்பு.
'2000 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக அங்கம் வகிப்பு.
'கொழும்பு றோயல் கல்லூரி மாணவர். ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :