முள்ளியவாய்க்கால் நினைவுநாளான 2009.05.18 இல் முடிவுற்ற இறுதிப்போரில் காணாமல் போன தங்கள் இரத்த உறவுகளுக்காக ஒவ்வொரு தாயும் தன் பிள்ளைகளையும், மனைவி தன் கணவனையும் மற்றும் சகோதரர்களையும் ஏனைய உறவுகளையும் நினைத்து ஒவ்வொரு வருடமும் கடத்தியவர்கள், கொலை செய்தவர்கள், காணாமல் ஆக்கியவர்கள், அதற்காக கட்டளையிட்டவர்கள் ஆகியோர்களுக்கு எதிராக மண்ணை அள்ளி வீசி அழுது, திட்டி, சாபமிட்டு வருகிறார்கள்.
அந்த சாபம் என்றோ ஒருநாள் பலிக்காதா ? பாதிக்கப்பட்டவனின் கண்ணீருக்கு நீதி கிடைக்காதா ? என்று ஒவ்வொரு வருடமும் சிந்திப்பதுண்டு. அது தற்போது தெரிகிறது.
கடந்த வருடம் வரைக்கும் தங்கள் உறவுகளுக்காக தமிழ் பிரதேசங்களில்கூட நினைவு நாளை அனுஷ்டிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த வருடத்தின் இன்றைய நாளில் இறுதிப் போரின் வெற்றிக்காக வெற்றிவிழா கொண்டாடப்படுகின்ற காலிமுக திடலில் முள்ளியவாய்க்கால் நினைவுதினம் இன்று சிங்கள மக்களின் அனுசரணையுடன் அனுஷ்டிக்கப்பட்டு வருவதானது தாய்மார்களின் கண்ணீருக்கு கிடைத்த வெற்றி என்று கூற முடியும்.
காலம் எவ்வாறு மாறுகிறது என்று பார்த்தீர்களா ? இந்த வருடம் இப்படி அனுஷ்டிக்க முடியுமென்று அதுவும் சிங்களவர்களின் பங்கேற்புடன் நடைபெறுமென்றும், இராணுவ கொண்டாட்டம் அந்த இடத்தில் நடத்த முடியாது என்றும் யாராவது கடந்த வருடம் நினைத்திருப்பார்களா ?
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment