தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையை சிக்கலின்றி நடாத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று பரீட்சைத் திணைக்கத்தில் இன்று (17) நடைபெற்றது.
எதிர்வரும் 23 ஆம் திகதி பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில் நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக போக்குவரத்து சிக்கல்களுக்கு மத்தியில் பிரச்சினைகளின்றி பரீட்சையை நடாத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பில் முப்படைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பவற்றுடன் இதற்கு முன்னர் கலந்துரையாடியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment