வெசாக் பண்டிகையையொட்டி அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களும் நேற்று (15) வெசாக் கூடுகளினால் அலங்கரிக்கப்பட்டு மத வழிபாடுகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றது.
பொத்துவில் ஆதார வைத்தியசாலையிலும் வெசாக் தின நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. வைத்தியசாலை வளாகம் வெசாக் கூடுகளினால் அலங்கரிக்கப்பட்டு அங்கும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது.
வைத்தியசாலையில் உள்ள நோயாளர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு (தன்சல்) பகல் போசனம் வழங்கப்பட்டதுடன், அன்றைய தினம் இரவு பக்திப்பாடல் மற்றும் பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து சகலருக்கும் உணவு மற்றும் பாணங்களும் வழங்கப்பட்டது.
குறித்த போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பொத்துவில் ஆதார வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினால் பரிசில்களும் வழங்கப்பட்டது. வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.ரஜாப், நலன்புரிச் சங்கத்தின் தலைவர் டொக்டர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன், செயலாளர் டொக்டர் எஸ்.எச்.யஸீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு குறித்த பரிசில்களை வழங்கி வைத்தனர்.
0 comments :
Post a Comment