பொருளாதார பிரச்சினைகளை சீர்செய்ய சகல கட்சிகளுடன் இணைந்து தீர்வொன்றினை பெற்றுத்தர வேண்டும்



பாறுக் ஷிஹான்-
தொழிலாளர் தினத்தை ஏனைய நாடுகள் மிக விமர்சையாக கொண்டாடிக்கொண்டு இருக்கின்ற நிலையில் எங்கள் நாட்டில் உள்ள ஊழியர்கள் மிகவும் வறுமையில் உள்ளார்கள்.எனவே நாட்டின் தற்போதைய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு ஒற்றுமையாக அனைவரும் தீர்வொன்றை பெற போராட வேண்டும் என கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல்.கபீர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்க அலுவலகத்தில் சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் மக்கள் போராட்டம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை(1) மாலை நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

சர்வதேச தொழிலாளர் தினத்தை தற்போது உலகம் பூராகவும் அனுஸ்டிக்கின்ற நிலையில் எமது நாட்டின் உள்ள நிலைமையினால் அத்தினத்தை மிக விமர்சையாக கொண்டாட முடியாததனால் நாம் கவலை அடைகின்றோம்.அந்த வகையில் எமது நாட்டின் பொருளாதார சிக்கல் மற்றும் ஸ்திரமற்ற அரசாங்கம் இது போன்ற பல சிக்கல்களுக்கு மத்தியில் இந்த ஊழியர் தினத்தை அனுஸ்டிக்கின்ற துப்பாரக்கிய நிலைக்கு இந்த நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ள நிலையை பார்க்கின்ற போது மிக வேதனையாக உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நாட்டில் உள்ள ஊழியர்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்.தற்போதைய வாழ்க்கை செலவு ஊழியர்கள் மத்தியில் சிரமங்களை கொடுக்கின்றது.கல்முனை பொதுச்சந்தையானது குறைந்த ஊழியர்களை கொண்டு சிறப்பாக இயங்கிய ஒரு சந்தையாகும்.இன்று இச்சந்தை வெறிச்சோடிகாணப்படுகின்றது.

எவ்வித வியாபாரங்களும் இல்லாமல் தொழிலாளர்கள் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.இந்த தொழிலாளர் தினத்தை ஏனைய நாடுகள் மிக விமர்சையாக கொண்டாடிக்கொண்டு இருக்கின்ற நிலையில் எங்கள் நாட்டில் உள்ள ஊழியர்கள் மிகவும் வறுமையில் உள்ளார்கள்.எனவே நாட்டின் தற்போதைய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு ஒற்றுமையாக அனைவரும் தீர்வொன்றை பெற போராட வேண்டும்.

இன்று காலி முகத்திடலில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக இரவு பகல் பாராது மழை வெயில் என இல்லாமல் அம்மக்கள் போராட்டத்தில் படுகின்ற கஷ்டங்களை பார்க்க முடியாமல் இருக்கின்றது.ஆகவே கௌரவ ஜனாதிபதி பிரதமர் அவர்களே இந்த நாட்டின் ஊழியர்களின் நிலைமைகளை கவனத்தில் கொண்டு இந்த நாட்டில் உள்ள சகல பொருளாதார பிரச்சினைகளை சீர்செய்ய ஏனைய கட்சிகளுடன் இணைந்து தீர்வொன்றினை பெற்றுத்தர வேண்டும் என கல்முனை பொதுச்சந்தையில் இருந்து மிக வினயமாக கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் எதிர்காலத்தில் புதிய அரசாங்கம் அமைய வேண்டும் என எதிர்பார்த்தவர்களாக இருக்கின்றோம். சிங்களம் தமிழ் முஸ்லீம் என்றில்லாமல் இலங்கை மக்கள் என தற்போது ஒற்றுமையுடன் ஊழியர்கள் சகலரும் செயற்படுகின்றனர்.இதற்கு கடந்த காலத்தில் கல்முனை பொதுச்சந்தையும் இதற்கு எடுத்து காட்டாக அமைந்தமையும் சகலரும் அறிந்த விடயமாகும்.எமது கல்முனை பொதுச்சந்தையில் சுமார் 300க்கும் அதிகமான கூலித் தொழிலாளர்கள் இருக்கின்றார்கள்.இந்த கூலித் தொழிலாளர்களின் நிலைமையை நாங்கள் கருத்தில் கொண்டு கொரோனா காலகட்டத்தில் எமது வர்த்தக சங்கத்தினால் ஒரு சிறு கொடுப்பனவினை வழங்கி இருந்தோம்.அது மாத்திரமன்றி கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் எங்கள் சந்தையிலுள்ள மூடை தூக்கும் தொழிலாளர்களுக்கு சீருடைகளை வழங்கி இருந்தோம்.
எமது சகோதர்கள் போன்று அவ்வூழியர்களை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்.இந்த ஒற்றுமையான நிலைமையினை கல்முனை பொதுச்சந்தையில் மட்டுமல்லாது நாடு பூராகவும் இவ்வாறான ஒற்றுமை நிலவ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றோம்.எனவே தான் அனைத்து ஊழியர்களும் நிம்மதியாக வாழ அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.

மேலும் இச் செய்தியாளர் சந்திப்பில் கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்க தலைவர் ஏ.பி ஜமால்டீன் ஹாஜி மற்றும் பொருளாளர் ஐ.எல்.எம் யூசூப் ஆகியோர் இணைந்திருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :