தாழமுக்கம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் மீனவர்கள் பாதிப்பு



பாறுக் ஷிஹான்-
ங்கக் கடலில் தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடல் அலையில் உயரமும் வேகமும் அதிகமாகவுள்ளது.அம்பாறை மாவட்டத்தில் தாழ் அமுக்கம் காரணமாக கடல் அலை வழமைக்கு மாறாக முன்நோக்கி வந்துள்ளது.இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லலாமல் தங்களது உடமைகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் வெள்ளிக்கிழமை(13) ஈடுபட்டிருந்தனர்.

தாழமுக்கம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் கடல் முன்னோக்கி வருவதுடன் மீன்பிடி நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் மீனவர்களின் தங்குமிடம் மற்றும் பொது மக்கள் ஒன்று கூடும் பகுதிகளை கடல் அலைகள் சூழ்ந்துள்ளதுடன் போக்குவரத்து மேற்கொள்ளும் பாதைக்கு அருகாமையில் கடல் அலை வந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேலும் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு இழுத்துச் செல்வதுடன் கடலின் அலை அதிகம் வருவதால் மீனவர்களின் அன்றாட தொழில் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வழமைக்கு மாறாக கடல் அலைகளின் தாக்கம் அதிகரித்துஇ கடல் நீர் கடற்கரையில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்துக்கு அப்பால் உள்ள நிலப் பகுதிக்குள்ளும் மக்கள் குடியிருப்புப் பிரதேசத்துக்குள்ளும் கடல் நீர் உட்புகுந்துள்ளது.
நிந்தவூர் அக்கரைப்பற்று மருதமுனை பெரியநீலாவணை காரைதீவு பகுதியில் கடல் நீர்இ கடற்கரைப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பிரதான காபட் வீதியையும் தாண்டிஇ நிலப்பரப்பில் புகுந்தமையினால் கடற்கரையில் தரத்து வைக்கப்பட்ட படகுகள்இ சிறிய ரக வள்ளங்கள் மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் போன்றன கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு கதிரவெளி வாகரை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மூவரும் முல்லைத்தீவு அளம்பில் செம்மலை கடலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்ததைச் சேர்ந்த சகோதரர்கள் மூவரும் அம்பாறை மாவட்டம் மருதமுனை பகுதியில் இரு நண்பர்களும் கடலில் குளிக்கச்சென்ற நிலையில் சம காலத்தில் உயிரிழந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :