பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை வலுவூட்டும் "திரியமங்பெத்த" நிகழ்ச்சி திட்டம் !



நூருல் ஹுதா உமர்-
பெண்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக வலுவூட்டும் நோக்கில் தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வரும் திரியமங்பெத்த நிகழ்ச்சித்திட்டமானது அம்பாரை மாவட்ட பெண்கள் அபிவிருத்திப் பிரிவின் பங்கேற்போடு மாவட்டம் பூராகவும் பெண்கள் அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகளுக்கு சுயதொழில் முயற்சிகளை வலுவூட்டுவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.இத்தொடரில், திரியமங்பெத்த நிகழ்ச்சித் திட்டமானது இறக்காமம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களை பொருளாதார ரீதியாக அவர்களின் சுயதொழில் முயற்சிகளை ஊக்கிவித்து மேலும் வலுவூட்டுவதன் மூலம் நிலைபேறான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு அவர்களுக்குத் தேவையான கணக்கீட்டு முறைகள், நாளாந்த கணக்கீட்டு பதிவேட்டு முறைகள், வருமானத்தை கூட்டுவதற்கான வியாபார உக்திகள் தொடர்பில் ஒரு நாள் செயலமர்வாக இந்நிகழ்வு இடம்பெற்றது.

இச்செயலமர்விற்கு வளவாளர்களாக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சுரேக்கா மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவு மாவட்ட உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தார். பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர். றிஸ்வானுல் ஜன்னாஹ், பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் ஆர்.எஸ். றிம்ஸியா ஜஹான், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.சபறுல் ஹஸீனா, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. றிஷாட் ஆகியோர் கலந்துகொண்டு செயலமர்வை நடாத்தி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :