ஊவா மாகாண ஆளுநரின் புதல்வி இங்கிலாந்தில் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றி



ங்கிலாந்தில் நடைபெற்ற டொட்டஹன் வட்டாரத்திற்கான உள்ளூராட்சித் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் ஊடாக போட்டியிட்ட ஊவா மாகாணசபை ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் பெரோஸா முஸம்மில் ஆகியோரின் புதல்வி ஷஸ்னா முஸம்மில் வெற்றிபெற்றுள்ளார்.

அப்பிரதேசத்தில் இலங்கை வாக்காளர்கள் இல்லாதபோதிலும் இந் நகரை தெரிவு செய்து, அப் பிரதேசத்தில் தனது பிரசார சமூக சேவைகளைச் செய்து அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் மனதை அவர் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மே மாதம் 5ஆம் திகதி குறித்த தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.

இங்கிலாந்தில் உள்ள திறந்த பல்கலைக்கழகத்தில் 'MSc in Development Management' மற்றும் Cardiff Metropolitan பல்கலைக்கழகத்தில் MBA பட்டப்படிப்புகளை நிறைவு செய்துள்ள ஷஸ்னா முஸம்மில், சமூக சேவை அமைப்புக்களில் தொண்டராக பல்வேறு அமைப்புக்களில் உறுப்பினராக இருந்து வயது வந்தவர்களுக்கு உதவுதல், கெயினாஷ் இளைஞர் அமைப்பு ஊடாக சிறுவர்கள் சிறையில் உள்ள பெற்றோர்கள் அவர்களது குழந்தைகள் பராமரிப்பு போன்ற சமூக சேவைகளைச் செய்து வருகின்றார்.


TATTENHOE - Conservative candidate Fathima Muzammil is elected

Muzammil, Fathima Shazna CON - 1167

Malik, Rukhsana Kossier LAB - 990

Bjorck, Lucy Rebecca GREEN - 268

Walden, Steven LIB DEM - 248

Electorate:8644

Turn Out:2695 (31.18%)

Rejected Papers:22
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :