மருதமுனை ஷர்மில் ஜஹான் கல்முனை மாநகர சபை உறுப்பினராக பதவியேற்ப்பு



ஏ.எல்.எம்.ஷினாஸ்-
ல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பான புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள மருதமுனையை சேர்ந்த பதுர்தீன் ஷர்மில் ஜஹான் இன்று(12) கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் முன்நிலையில் சத்தியப்பிரமாண பத்திரத்தை கையளித்து, பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் சபைச் செயலாளர் ஏ.எம்.ஆரிப் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எல் றபீக் ஒழுக்காற்று நடவடிக்கை மூலம் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து அவ்விடத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் சமூக சேவகரும் வர்த்தகருமான பதுறுதீன் சர்மில் ஜஹான் அவர்களை புதிய உறுப்பினராக நியமிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர அவர்களால் நியமன கடிதம் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது.

இவர் கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் கல்முனைத் தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு தொகுதியில் இரண்டாவது அதிகப்படியான வாக்கு பெற்றுக் கொண்டவர் ஆவார். பதுறுதீன் சர்மில் ஜஹான் மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி ( தேசிய பாடசாலை ) யின் பழைய மாணவர் சங்க உப தலைவரும் மஸ்ஜிதுல் றையான் ஜும் ஆ பள்ளியின் செயலாளரும் ஆவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :