ஜீவன் தொண்டமானின் ரமழான் வாழ்த்து செய்தி



தலவாக்கலை பி.கேதீஸ்-
புனித நோன்பிருந்து ரமழான் பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும் என் மனம் நிறைந்த ரமழான் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

எமது இஸ்லாமிய சகோதரர்கள் தங்களது புனித மாதமாகிய ரமழான் முழுவதும் நோம்பு நோற்று முடிந்ததன் பின்னர் ரமழான் பெருநாளை கொண்டாடுகின்றனர். புனித நோன்பு காலத்தில் கற்றுக் கொண்ட பாடங்களான பொறுப்புணர்வு, ஒழுக்கமான வாழ்க்கை, மனித நேயம், நல்லிணக்கம், அர்ப்பணிப்பு ஏழைகளுக்கு உதவுதல், இறைநேசம் என்பவற்றை வாழ்நாள் முழுக்க கடைபிடிக்க வேண்டும். ரமழானின் மூலம் கிடைக்கும் உயர் பலாபலன்கள் இவ்வுலக மக்கள் மற்றும் ஏனைய உயிர்கள் அனைத்திற்கும் நோய்நொடியற்ற சுகமான நல் வாழ்வை உரித்தாக்கட்டும். இன்றைய சூழலில் இஸ்லாமிய சொந்தங்கள் இம்முறை பொருளாதார நெருக்கடிகளாலும், விலைவாசி உயர்வினாலும் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் தமது பெருநாளை கொண்டாடுகின்றனர். எனவே, அனைத்து விதமான மாற்றங்களுக்கும், முன்னேற்றங்களுக்கும் முன்னெடுத்துச் செல்ல இந்நன்னாளில் அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கு ரமழான் பெருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :