நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக சம்மாந்துறையில் இருந்து இறக்காமம் பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள் தங்களை அருகிலுள்ள பாடசாலைக்கு இணைக்குமாறு கோரி நேற்று மகஜரை கையளித்தனர்.
நேற்று (30) திங்கட்கிழமை சம்மாந்துறை வலயக்கல்வி பணிமனைக்கு வந்த குறித்த ஆசிரியர்கள் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் அவர்களிடம் கையளித்தனர்.
" எரிபொருள் விலையேற்றம் காரணமாக இறக்காமம் கிராமத்திற்கு செல்வது கஸ்டம் என்றும் தங்களை சம்மாந்துறையில் தற்காலிகமாக இணைத்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர் .
பதிலளித்த வலயக் கல்விப் பணிப்பாளர் நஜீம்" இது சம்மாந்துறைக்கு மாத்திரமல்ல முழு நாட்டிற்கும் உள்ள பிரச்சினை . உடனடியாக உங்களை சம்மாந்துறையில் இணைக்க முடியாது. உங்களை நம்பியுள்ள இறக்காமம் மாணவர்களை சற்று சிந்தித்து பாருங்கள். நீங்கள் முகாமைத்துவ உதவியாளர் போன்ற அல்ல .நீங்கள் ஆசிரியர்கள் .எனவே தற்காலிகமாக நீங்கள் சில கஷ்டங்களை துன்பங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும் .எனினும் நீங்கள் கூறிய வண்ணம் இங்கிருந்து காலையிலேயே இறக்காமம் செல்வதற்கு இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டி ஒன்றை ஒழுங்கு செய்வதாகவும் மேலும் வரவு பதிவுக்கான கைவிரல் அடையாள பதிவை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அதிபர்களுக்கு உத்தர விடுவதாகவும் பணிப்பாளரின் உறுதியளித்தார்.
இதனையடுத்து பணிப்பாளரின் பதிலை ஏற்று வீடு திரும்பினர்
. இந்த சந்திப்பின்போது பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஹைதர்அலி உதவி கல்வி பணிப்பாளர் சகா தேவராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment