திருகோணமலை மாவட்டம்,தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியை உள்ளடக்கிய கிராம சேவகர் பிரிவில் மாங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் இன்று (13) பிரதேச செயலகத்தில் வைத்து பயனாளிகளுக்கு மாங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
சிறுதோட்ட உற்பத்தி கரும்பு மிளகாய் முந்திரிகை இராஜாங்க அமைச்சின் திட்டம் ஊடாக வழங்கப்பட்ட சுமார் 2500 கன்றுகளே இவ்வாறு 12 கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கிய வகையில் வழங்கப்பட்டன. இயற்கையான முறையில் பயிர்களை சொந்த உற்பத்தியில் வளர்ச்சியடையச் செய்யும் நோக்கில் இது வழங்கப்பட்டன. இதில் உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் உடகெதர, பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் நிஹாத் உட்பட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment