புனித ரமழான் மாதத்தில் இறையச்சத்துடன் நோன்பு நோற்று, ஆன்மீக மேம்பாட்டுக்காக வணக்க வழிபாடுகளிலும் ஈடுபட்டு இன்று பெருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எனது ஈகைத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் உவகையடைகின்றேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
புனித ரமழான் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய சகோதரர்கள் ஒருமாத காலம் நோன்பிருந்து புதிய பிறை பார்த்து கொண்டாடும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் இஸ்லாமிய சமய நாட்காட்டியில் ஒரு முக்கிய நாள் ஆகும். இவ் நோன்பு மாதம் சகோதர இனமான முஸ்லிம் சகோதரர்களிடையே சகிப்புத்தன்மை, பொறுமை,அளப்பரிய நற்கருமங்களில் ஈடுபடும் மனோ நிலையை ஏற்படுத்துகிறது. பகல் முழுதும் பசித்திருந்து இரவு முழுவதும் வணங்கி நின்று பாவங்களைப் போக்கும் ரமழான் மூலம் கிடைக்கும் உயர் பலாபலன்கள் இவ்வுலக மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றார்.
0 comments :
Post a Comment