கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பெரியநீலாவணை தமிழ் - முஸ்லிம் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு பெருநாள் உணவுப் பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலயத்தில்(01) நடைபெற்றது.
ஏ.ஆர்.எம். மன்சூர் பவுண்டேஷனின் உதவித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த நிகழ்வை பெரியநீலாவணை சமூக அபிவிருத்திக்கான ஒன்றியம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில் ஏ. ஆர். எம். மன்சூர் பவுண்டேஷன் ஸ்தாபகரும் அவுஸ்திரேலியா முஸ்லிம் கவுன்ஸிலின் செயலாளருமான சட்டத்தரணி திருமதி மர்யம் மன்சூர் நளீமுடீன், அவருடைய கணவர் நளீமுடீன் சிஹாப்டீன், கல்முனை வடக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.டெலினா, பெரியநீலாவணை சமூக அபிவிருத்திக்கான ஒன்றியத்தின் நிர்வாக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து பெருநாள் வாழ்வாதார உதவிகள் அவசியப்பட்ட குடும்பங்களுக்கு இவ்வாறு உணவுப் பொதிகளை வழங்கி வைத்னர்.
இதில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட மௌலவி அஷ் செய்க் எப்.எம்.அஹமது அன்சார் மௌலானா, பெருநாள் தினத்தில் மக்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பது வரவேற்கத்தக்கதாகும். இது ஸகாத்துல் பித்ர் வழங்கும் காலமாக இருப்பதால் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு இரட்டிப்பு நன்மை உண்டு. என இங்கு தெரிவித்ததுடன் விசேட துஆ பிரார்த்தனையையும் நிகழ்த்தி வைத்தார்.
0 comments :
Post a Comment