கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையின் நிறைவேற்று உயர் சபை செயற்பாட்டாளர்களுக்கான
விஷேட கூட்டம் பேரவையின் கெளரவத் தலைவர் தேசபந்து ஜெலீல் ஜீ தலைமையில் 2022.05.15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலத்தில் இடம் பெற்றது.
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவையின் உயர்பீட நிர்வாகிகளின் தீர்மானத்திற்கு இணங்க “அட்சயம்” கவிதைத் தொகுதி வெளியீடு, சிரேஷ்ட கவிஞர்களின் கவிதை வாசித்தல் "பாராட்டுப் பத்திரம் வழங்கல்" அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண் ஆளுமைகளுக்கு "மங்கையர் திலகம் விருதுகள்" வழங்கி கௌரவித்தல் ஆகிய முப்பெரு விழா ஜுன் மாதம் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
பல மேடை நிகழ்ச்சிகள் உள்ளடங்கலாக காலை 8.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் இம்முப்பெரு விழா
நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பேரவையின் உயர்பீட நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் இணைப்பாளர்கள் அடங்கலாக நிதியீட்டல்குழு, வெளியீட்டுக்குழு,
ஊடக பிரசாரக்குழு, சேமநலன்புரிக்குழு மற்றும் கலை கலாசாரக்குழு என ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு குழுப் புகைப்படங்கள் மற்றும்
பேரவையின் நிறைவேற்று உயர் சபையின் உறுப்பினர்கள் அடங்கலாக புகைப்படங்கள் எடுக்கப்பட்டு பொறுப்புக்கள் வழங்கப்பட்டதுடன் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு
முப்பெரும் விழாவுக்குரிய ஒத்திகைகளும் பார்க்கப்பட்டது.
பேரவையின் கெளரவ செயலாளர் விபுலாமாமணி பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரி.சகாதேவராஜா, கெளரவ பொருளாளர் வித்தகர் செஸிலியா, கல்வியியலாளர்கள் மற்றும் கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டு ஆலோசனைகளும், ஒத்துழைப்புக்களையும் வழங்கினார்கள்.
0 comments :
Post a Comment