எதிர்வரும் சில வாரங்கள், நாட்டிற்கு மிகவும் சிரமமான காலம் - பிரதமர் ரணில்



திர்வரும் சில வாரங்கள், நாட்டிற்கு மிகவும் சிரமமான காலமாக அமையுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை தொடர்பாக தாம் பல நாடுகளின் தூதுவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருப்பதாகவும் இந்தக் கலந்துரையாடல் பயனுள்ளதாக அமைந்திருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

இந்தியாவுடனான வேலைத்திட்டங்கள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்கு மேலும் 3 மாதங்கள் செல்லும். அதன் பின்னர் நாட்டின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டார்.

அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே பொருளாதார பாதிப்பிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :