சம்மாந்துறை (க.பொ.த) சாதாரண தர மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்வு



சம்மந்துறை நிருபர்-
ல்விக்கு கைகொடுப்போம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முகம்மது ஹனிபா அவர்களின் ஆலோசனையிலும் உதவி பிரதேச செயலாளர் யு.எம். அஸ்லம் அவர்களின் வழிகாட்டுதலுக்கமையவும் கிராம சேவை உத்தியோகத்தர்
ஐ.எல்.எம் ஒஜிஸ்கான் அவர்களின் ஏற்பாட்டில் (க.பொ.த) சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள சம்மாந்துறை சென்னல் சாஹிறா வித்தியாலய மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் 'பரீட்சையை எவ்வாறு எதிர்கொள்வது அதனை எவ்வாறு வெற்றி கொள்வது' என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் உளவளத்துணை ஆலோசனை நிகழ்வானது கல்லூரியின் அதிபர் யு.எல்.எம் இஸ்மாயில் தலைமையில் செவ்வாய் (17) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முகம்மது ஹனிபா அவர்கள் கலந்து கொண்டதோடு சிறப்பு வளவாளராக உளவள துறை ஆலோசகர் மனுஷ் அபூபக்கர் அவர்கள் கலந்துகொண்டு ஆலோசனையும் வழிகாட்டலும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. மேலும், இந்நிகழ்வில் ,கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எம்.எல். தாசீம் மற்றும் கல்லூரியின் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :