கொழும்பில் பல எரிபொருள் நிலையங்களில் பெருமளவான வாகனங்கள்



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ன்றும் கொழும்பில் பல எரிபொருள் நிலையங்களில் பெருமளவான வாகனங்கள் எரிபொருளை நிரப்ப காத்திருந்தனர் .
மாளிகாவத்தைஇ பஞ்சிகாவத்தை பகுதிகளில் எரிபொருளை பெற்றுக் கொள்ள காத்திருக்க வேண்டாம் என பொலிஸார் தெரிலித்துள்ளனர். பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டபோதிலும் அவை மூடப்பட்டே காணப்பட்டன.
அத்துடன் எரிபொருள் வந்தவுடன் ஒலிபெருக்கி மூலம் அவ்வப்பகுதி பொலிஸ் நிலையங்களால் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்று பிற்பகல் வேலையில் சாரதிகள் வாகனங்களுடன் வீதியை மறித்து போராட முற்பட்ட வேளையில் மருதானை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நான்கு சமயத் தலைவர்களும்இ மருதானை பொலிஸ் பொறுப்பதிகாரியும் தமக்கு தீர்வு பெற்றுத்தருவதாக கூறி ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு கூறியதற்கு இணங்க அது கைவிடப்பட்டு ஐ.ஓ.சி நிறுவனத்துடன் கதைத்து மூன்று மணித்தியாலத்திற்குள் 6600 லீற்றர் பெற்றோலை அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர்.
குறித்த உதவிக்காக சர்வமதத் தலைவர்களுக்கும் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :