கல்விக்காக உழைத்த ஹுசைன் சேர் நிலையான தர்மத்தின் சொந்தக்காரராக இருந்தார் : ஹரீஸ் எம்.பி இரங்கல்



நூருல் ஹுதா உமர்-
ல்முனை சாஹிரா கல்லூரியின் ஆசிரியராக பல வருடங்கள் சிறப்பாக பணியாற்றி, பகுதித்தலைவராக வலம் வந்த எங்கள் ஏ.எம் ஹுசைன் சேர் அவர்கள் அதிபராக சுமார் பத்து வருடங்களுக்கு மேல் கல்முனை ஸாஹிரா கல்லூரியில் கடைமையாற்றி ஓய்வு பெற்றிருந்தார். கல்முனை ஸாஹிரா கல்லூரியின் வளர்ச்சியில் ஆசிரியராக, பகுதி தலைவராக, பிரதி அதிபராக, அதிபராக இருந்து கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு பாரிய அளவிலான பங்களிப்பினை செய்த அன்னார் பௌதீக வள அபிவிருத்திகள் மட்டுமல்லாது பாடசாலையின் கல்வி மற்றும் கல்விக்கு வெளியிலான சகல துறைகளிலும் பாடசாலையை ஒளிரச்செய்திருந்தார் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது இரங்கல் செய்தியில் மேலும், கல்முனை ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபர் என்பதையும் தாண்டி சிறந்த அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர், நல்ல நிர்வாகியாக திகழ்ந்த அல்ஹாஜ் ஏ.எம் ஹுசைன் சேர் அவர்கள் காலமானார் எனும் செய்தியறிந்து மிக கவலையடைந்தேன். இவருடைய காலத்தில் நான் ஒரு மாணவனாக இருந்த நாட்கள் என்கண்முன்னால் வந்து செல்கிறது. பிரதேசத்தின் கல்விக்காக ஆற்றிய பணிகளுக்கும், கல்வி மேம்பாட்டுக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்ட அன்னாரின் நல்லமல்களை இறைவன் ஏற்றுக்கொண்டு மண்ணறை வாழ்வை வெளிச்சமாக்கி, ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சொர்க்கத்தை கொடுத்தருள்வாயாக என்று இறைவனிடம் கையேந்தி பிராத்திக்கிறேன். ஏ.எம் ஹுசைன் சேர் அவர்களின் பிரிவால் துயருற்ற அன்னாரது குடும்பத்தினர், உறவினர் எல்லோருக்கும் என்னுடைய ஆறுதல்களை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :