ஆனால் அவ்வாறான ஜனநாயக போராட்டத்தை ஒழிப்பதற்காக அலரிமாளிகையிலிருந்து கூலிப்படைகளை அனுப்பி தாக்கி அழிக்க முற்பட்ட பின்புதான் போராட்ட குழுவினர் தற்காப்பு நடவடிக்கையில் வீரியத்துடன் இறங்கினர்.
நாட்டின் வேறு பிரதேசத்திலிருந்தும் காலிமுகத்திடல் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியவர்களும், அப்போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் விதமாக நாட்டின் பல பாகங்களிலும் உள்ள ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் சொத்துக்களை சேதப்படுத்தினர்.
நாடுதழுவிய ரீதியில் இவ்வாறான தற்காப்பு போராட்டம் நடத்தாமல் இருந்திருந்தால், காலிமுகத்திடல் போராட்டம் ஒழிக்கப்பட்டு ராஜபக்சாக்களின் கை ஓங்கியிருக்கும். அதாவது மக்கள் போராட்டம் நசுக்கப்பட்டிருப்பதோடு ஆட்சியாளர்கள் அச்சப்பட்டிருக்கமாட்டர்கள்.
அவ்வாறு ராஜபக்சாக்கள் கூலிப்படைகளை அனுப்பாமல் இருந்திருந்தால், இவ்வளவு சொத்துக்கள் தீயில் அழிந்திருக்காது, போராட்டம் அமைதியாக இருந்திருக்கும் என்பதனை நாங்கள் உணர வேண்டும்.
அதனை உணராமல் போராட்டக்காரர்களை வன்முறையாளர்கள் என்று சிலர் சித்தரிக்க முற்படுவது தவறானதாகும்.
இந்த போராட்டமானது சிங்கள, தமிழ், முஸ்லிம் என்றில்லை. எல்லோருக்கும் பொதுவானது. அப்படியிருக்கும் நிலையில், அரசியல் அதிகாரத்தில் உள்ள முஸ்லிம் அதிகாரிகளின் சொத்துக்கள் அழிக்கப்பட்டதற்காக மட்டும் நாங்கள் புலம்புவதிலும், கண்ணீர் சிந்துவதிலும் பயனில்லை.
முகம்மத் இக்பால்
0 comments :
Post a Comment