குணசிங்கபுர மக்கள் சமய எரிவாயு பெறுவதற்காக பல நாட்கள் காத்திருந்தும் எரிவாயு கிடைக்காத நிலையில் இன்று பிரதேசத்திலுள்ள பாதையை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பிரதேசத்தில் போக்குவரத்து செய்யமுடியாது வாகனச்சாரதிகள் பெரிதும் அசெளகரியங்களுக்கு உள்ளாகினர்.
கடந்த வியாழக்கிழமை வாழைத்தோட்ட மக்களுக்கு எரிவாயு பெற்றுத் தருவதாக வாழைத்தோட்ட பொலிசார் தெரிவித்திருந்த நிலையில் அம்மக்களுக்கு எரிவாயு பெற்றுக்கொடுக்க முடியவில்லை. குறித்த தினத்தில் நீண்ட வரிசைகளில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்த நிலையில் அவர்கள் கடந்த மூன்று நாட்களாக காத்திருந்தும் ஏமாற்றமே கிடைத்தது. இதன் காரணமாக மக்கள் கோபமடைந்து தமது கேஸ் சிலிண்டர்களை குணசிங்கபுர பிரதான வீதிக்கு குறுக்காக வைத்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடிருந்தனர். இதன் காணரமாக அப்பகுதி போக்குவரத்து நீண்ட நேரம் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்த இராணுவ அதிகாரியொருவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு கதைத்து எதிர்வரும் புதன்கிழமை எரிவாயுவை பெற்றுத்தருவதாக உறுதியளித்ததையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
0 comments :
Post a Comment