மக்களின் அடிப்படை உரிமைகளான கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், பிரசுர சுதந்திரம் மற்றும் அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம் என்பனவற்றை உறுதிப்படுத்துவதற்காக அவசரகால பிரகடனத்தை மீளப்பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது .
அமைதியான போராட்டங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை நசுக்கவோ அல்லது தன்னிச்சையான கைதுகள் மற்றும் காவலில் வைக்கவோ அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது .
இதேவேளை போராட்டங்கள் வன்முறையாக இருக்கக்கூடாது என்றும், எல்லா நேரங்களிலும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதோடு அவசரகாலச் சட்டத்தை ஏன் பிரகடனப்படுத்தினார் என்பதற்கான காரணங்களை மக்களுக்கு உடனடியாக விளக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment