சிறைககைதிகளை போராட்டத்தில் ஈடுபடுத்தியதை கண்டிப்பதாக சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.
இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டி தலை நகர் கொழும்பில் அலரி மாளிகைக்கு முன்னாலும், ஜனாதிபதிச் செயலகத்திற்கு முன்னாலும் பொது மக்களால் ஜனநாயக ரீதியிலான அமைதியான ஆர்ப்பாட்டம் இடம் பெற்றபோது அலரிமாளிகையில் இருந்து வந்த குண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை சிறைக் கைதிகளை பாதுகாக்கும் குழு வன்மையாக கண்டிப்பதாக தெரித்துள்ளனர்.
இதுகுறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்று இன்று புதுக்கடையிலுள்ள காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில் அமைப்பின் ஏற்பாட்டாளர் சட்டத்தரணி சேனக்க பெரேரா செயலாளர் சுரேஸ் நந்திமால் சில்வா தேசிய அமைப்பாளர் நிசார் மெளலானா சட்டத்தரணி தம்பையா ஜயரத்னராஜா ஆகியோர்கள் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.
இதன்போதே குழுவினர் தமது வன்மையான கண்டனங்களை தெரிவித்ததுடன் குண்டர்களை வன்முறைக்கு தூண்டிய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜோன்சன் பெர்னாண்டோ மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்வர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்ததுடன்.
குறிப்பாக சிறைக்கைதிகளை இவ்வாறான விடயங்களில் ஈடுபடுத்தியமைஇ வெளியிடங்களில் இருந்து குண்டர்களை கொண்டு வந்து பயன்படுத்தியமை பாரிய குற்றமாகும் எனவும் தெரிவித்த அவர்கள் ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன் மக்களை அமைதியாக செயற்படுமாறும் சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment