சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இளைஞர் யுவதிகளுக்கான மொழித்திறன் விருத்தி செயலமர்வு



சம்மாந்துறை நிருபர்-
சிய மன்றத்தின் அனுசரணையில் கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் " இலங்கையில் சமூக ஒருமைப்பாட்டினை வலுப்படுத்தல் " எனும் தலைப்பில் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்குடன் அம்பாறை மாவட்ட மூவின இளைஞர், யுவதிகளுக்கான ஒருநாள் மொழித்திறன் விருத்தி (தமிழ்-சிங்களம்) செயலமர்வு ஞாயிற்றுக்கிழமை (22)சம்மாந்துறை விளையாட்டு தொகுதி மண்டபத்தில் நடைபெற்றது.

கப்சோ நிறுவத்தின் திட்ட பணிப்பாளர் ஏ.ஜே காமில் இம்டாட் அவர்களின் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 22 இளைஞர் யுவதிகள் இச் செயலமர்வில் கலந்து கொண்டனர்.அத்தோடு ஏ.எம்.எம் முஜீப் இந்த நிகழ்வின் வளவாளராக கலந்து கொண்டதோடு கப்சோ நிறுவனத்தின் கள உத்தியோகத்தர்களான இஸ்மத், ஜப்ரான் மற்றும் சுமன் ஆகியோரும் கலந்து கொண்டனர்..
எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் மூலம் "நாம் இலங்கையர் "என்ற தேசிய உணர்வை அம்பாறை மாவட்டத்தில் மேம்படுத்தி ஐக்கியமாக வாழ்வதற்கு மொழி அறிவை எவ்வாறு பயன்படுத்தலாம் ,விருத்தி செய்யலாம் என இங்கு ஆராயப்பட்டது.

கப்சோ நிறுவனமானது எதிர்காலத்தில் பல கட்டங்களாக இந்த இளைஞர் குழு சமூக நல்லிணக்க வேலைத்திட்டங்களை செயற்படுத்த இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :