பிரதி சபாநாயகர் தெரிவு அரசாங்கத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறியவர்களின் நாடகத்தை அம்பலப்படுத்தும் – சுமந்திரன்!



பிரதி சபாநாயகர் தெரிவு அரசாங்கத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறியவர்களின் நாடகத்தை அம்பலப்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ருவிட்டரில் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில், “பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்பட்ட ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இதையடுத்து இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரை ஐக்கிய மக்கள் சக்தி பிரதி சபாநாயகருக்கான வேட்பாளராக நியமித்துள்ளது.
அரசாங்கத்தில் இருந்து வெளியேறி விட்டோம் என்று இத்தனை நாட்கள் நாடகம் நடத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மேலும் சிலரின் நாடக்த்தை பிரதி சபாநாயகர் தெரிவு அம்பலப்படுத்தும்” என அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :