புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை இன்று (03) மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் 6:15 மணிக்கு நடைபெற்றது. சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் கடந்த காலங்களில் வீடுகளுக்குள்ளேயே மக்கள் தமது பெருநாள் தொழுகையை நடத்தினார்கள்.
இம்முறை கடற்கரை திறந்தவெளியில் இமாம் ஜமாத்தாக நடைபெற்ற புனித நோன்புப் பெருநாள் தொழுகையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பெருநாள் தொழுகை மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற குத்பா பிரசங்கத்தையும் மௌலவி அஷ்ஷெய்க் கலாநிதி எம்.எல். முபாறக் (மதனி) நடாத்தினார்கள். ஆண்கள், பெண்களுக்கு வெவ்வேறாக இட வசதிகள் ஒதுக்கப்பட்டு தொழுகை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment