அமைச்சு பதவி ஏற்குமாறு ராதாவுக்கு அழைப்பு - ஆராய கூடுகிறது மத்தியகுழு
மஹிந்தவின் ‘தலைமறைவு வாழ்க்கை’தொடர்கிறது
பதவி விலகுமாறு IGPக்கு கடும் அழுத்தம்
வன்முறையாளர்களை கைது செய்ய காலக்கெடு
ஜனாதிபதியை எதிர்க்க மைத்திரி, விமல், வாசு முடிவு
நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்க தவறிய பொலிஸ்மா அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஜனாதிபதி முன்னிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
அத்துடன், பொலிஸ்மா அதிபர்மீது சரமாரியாக விமர்சனக் கணைகளையும் தொடுத்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் நேற்று (14) நடைபெற்றது.
சுமார் 91 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். மஹிந்த ராஜபக்ச இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ச கடந்த 10 ஆம் திகதி முதல் இன்றுவரை, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தலைமறைவாகவே வாழ்கின்றார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நாட்டில் கடந்த 9 ஆம் திகதி ஏற்பட்ட வன்முறை, அதனால் ஏற்பட்ட தாக்கங்கள், புதிய அரசு, நாடாளுமன்ற அமர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதன்போது மக்கள் பிரதிநிதிகளை பாதுகாக்க, பொலிஸ்மா தவறிவிட்டார்,
முன்கூட்டியே பாதுகாப்பு பொறிமுறையை வகுக்க தவறிவிட்டார், என அவருக்கு எதிராக சரமாரியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து இக்கூட்டத்துக்கு பொலிஸ்மா அதிபர் நேரில் வரழைக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் அவர் விளக்கமளித்தார். மேற்படி சம்பவங்கள் தொடர்பில் இரு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் தலைமையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட அனைவரையும் இரு வாரங்களுக்குள் கைது செய்யமுடியும் என பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, உறுதியளித்துள்ளார்.
அதன்பின்னர் புதிய பிரதமர் நியமனம் தொடர்பில் ஆராயப்பட்டது. புதிய பிரதமரின்கீழ் ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என மொட்டு கட்சி எம்.பிக்கள் அறிவித்தனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், கொள்கை ரீதியிலான முரண்பாடுகள் இருந்தாலும், நிபந்தனைகளின்றி அவர் பிரதமர் பதவியை ஏற்றதாலும், நாட்டு நலன் கருதியும் அவருக்கு ஆதரவு வழங்குவதற்கு மொட்டு கட்சி உறுப்பினர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். இதன்படி பிரதமருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை, ஜனாதிபதி கோட்டாய ராஜபக்சமீது அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது.
பிரதமர் நியமனத்தில் ஜனாதிபதி, தான்தோன்றித்தனமாக செயற்பட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றஞ்சாட்டினார்.
ம.ம.முவின் மத்தியகுழுக் கூட்டம்
இதற்கிடையில் மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு மற்றும் உயர்பீடக் கூட்டம் கட்சி தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று கூடவுள்ளது.
புதிய அரசுக்கு ஆதரவளித்து அமைச்சு பதவியை ஏற்குமாறு ராதாகிருஷ்ணனுக்கு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைப்புகளில் இருந்து அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த அழைப்பையேற்று, அரசை ஆதரிக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சிலர், கட்சி தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய அரசுக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என மலையக மக்கள் முன்னணியும் அங்கம் வகிக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எத்தகையதொரு முடிவை எடுப்பது என்பது குறித்து இதன்போது ஆராய்ந்து - முடிவெடுக்கப்படவுள்ளது.
புதிய அரசுக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என மலையக மக்கள் முன்னணியும் அங்கம் வகிக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment