தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள்!



ல்வேறு தொழிற்சங்கங்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
வன்முறைகளை ஊக்குவிக்கும் அரசாங்கத்திற்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இன்று(10) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து கடமைகளிலிருந்தும் விலகுவதற்கு தமது உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், அரசியல்வாதிகள் பங்கேற்கும் கூட்டங்களில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சுகாதார ஊழியர்களும் நேற்று (09) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (09) ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று (10) காலை 8 மணி வரை தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர், வைத்தியர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

பல ரயில்வே தொழிற்சங்கங்களும் நேற்று (09) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

நன்றி News1st 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :