கல்முனை அல்-பஹ்ரியா தேசிய பாடசாலையில் தரம் 1 க்கு மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா இன்று வெள்ளிக்கிழமை(06) கல்லூரியின் மண்டபத்தில் நடைபெற்றது.
"சாதனைகள் படைக்க வரும் அன்புச் செல்வங்களை அன்புடன் வரவேற்கின்றோம்" எனும் தொனிப்பொருளில் பாடசாலையின் அதிபர் எம்.எஸ். எம் பைசால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் கெளரவ அதிதியாக கல்முனை முஸ்லிம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் வி.எம் சம்சம் உட்பட
பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.ஏ அஸ்தார்,எம்.ஏ சலாம், தரம் 1, 2 பிரிவின் பகுதித்தலைவர் ஏ.சி.எம் நளிம்,பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் எஸ்.எல் ஹமீட், பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஐ.எம் ஜிப்ரி, உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் நலன்விரும்பிகள், பெற்றோர்கள், எனப் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், அதிதிகளால் மாணவர்களுக்கு அகரம் எழுதப்பழக்கிய நிகழ்வும் இடம்பெற்ற அதேவேளை, மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், பாடசாலையில் தரம் 2இல் கல்வி பயிலும் மாணவர்கள் மாலை அணிவித்து புதிதாக அனுமதி பெற்ற தரம் 1 மாணவர்களை வரவேற்றதோடு, தரம் 2 மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
0 comments :
Post a Comment