குறிப்பாக சமையல் எரிவாயுவைப் பெற்றுக் கொள்ள முடியாத துப்பாக்கிய நிலைக்கு சம்மாந்துறை பிரதேச ஹோட்டல் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இதனால், ஹோட்டல்கள் பலவும் மூடப்பட்டுள்ளன.
ஹோட்டல்கள் கடந்த சில வாரங்களாக மூடப்பட்டுள்ளமையால் ஹோட்டல் உரிமையாளர்கள் வருமானத்தை இழந்துள்ளார்கள். அத்தோடு ஹோட்டல்களில் தொழில் புரிந்தவர்களும் தொழில்லாத நிலைக்குள்ளாகி உள்ளார்கள்.
இதனால், ஹோட்டல் உரிமையாளர்களும், அங்கு தொழில் புரிந்தவர்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளர்கள்.மேலும், சமையல் எரிவாயுவுடன் கோதுமை மா, பால்டின் போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், அத்தகைய பொருட்களை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஆதலால், ஹோட்டல்களுக்கு சமையல் எரிவாயு வழங்கப்படுவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றார்கள்.
0 comments :
Post a Comment