அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களுக்கும் கல்முனை கிளுகிளுப்பு சங்கத்தின் மூலம் பல மனித நேயப்பணிகள் இடம் பெற்று வருகின்றது. அந்த வகையில் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு "எல்லோரும் கரமிணைந்து நாமிணைந்த பெருநாள் தினம் " எனும் வேலைத்திட்டத்துக்கு அமைவாக
கல்முனை பிராந்தியத்தில் அடையாளப்படுத்தப்பட்ட விஷேட தேவையுடையவர்கள், பெண்கள் தலைமைத்துவம் தாங்கும் குடும்பங்கள், வருமானம் குறைந்தவர்களுக்கான உலர் உணவுப்பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வு தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதம செயற்பாட்டாளர் ஏ.எல்.ஆஸீர், இந்த நிவாரண பணிகளுக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது சங்கத்தின் சார்பாக பிரார்த்தனையுடன் கூடிய நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி சமூகத்திற்கான எமது கிளுகிளுப்பு சங்கத்தின் பணி தொடரும் என்றும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment