சுற்றாடல்துறை அமைச்சா் நசீர் அஹமட் கடமைகளைப் பொறுப்பேற்றார்.



அஷ்ரப் ஏ சமத்-
சுற்றாடல்துறை அமைச்சா் பொறியியலாளா் நசீர் அஹமட் இன்று (24) பத்தரமுல்லையில் உள்ள சுற்றாடல் அமைச்சில் வைத்து தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டாா். இந்.நிகழ்வில் அமைச்சின் செயலாளா் வைத்தியா் அனில் ஜெயசிஙக், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அலிசப்றி ரஹீம், காதா் மஸ்தான், எம. முஸாரப் ஆகியோரும் ் இந் நிகழ்வில் கலந்து கொண்டனா.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சா்.

தனக்கு இந்த அமைச்சு ஏறகனவே 20 நாட்களுக்கு முன்பு தரப்பட்டது. தற்போதைய அமைசச்சரவையில் இளம் அமைச்சா்கள், பல கட்சி சாா்ந்தவா்கள் உள்ளனா். இந்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தன்னால் எடுக்கக வேண்டிய சகல உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்குவேன். நான் றியாத்தில உள்ள பெற்றோலியம் பல்கலைக்க்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றேன். என்னுடன் கல்விகற்ற ஒரு சிரேஸ்ட மாணவனே தற்போது சவதி அரேபியாவில் பெற்றோலியத்துறை வள அமைச்சராக கடமையாற்றுகின்றாாா். என்னால் பல முயற்சிகளை எடுக்க முடியும். ஓமான் அரம்கோ பெற்றோலியம் கம்பனிகளுடன் என்னால் பேச்சுவாா்த்தை நடாத்த முடியும்.

நான் ஏற்கனவே கிழக்கு மாகாண முதலமைச்சராக கடமையாற்றிய அனுபவம் உண்டு அங்கு ஊழல் அற்ற சிறந்த நிர்வாக கட்டமைப்பினை கட்டியெழுபியது போன்று இ்ந்த அமைச்சினை பல்வேறு திட்டங்களை வகுத்து நாட்டுக்கு நன்மை பகிக்கக் கூடிய திட்டங்களை வகுத்து சிறந்த அமைச்சு ஒன்றினை சுற்றாடல் அமைச்சினை கட்டியெழுப்ப முடியும். என நசீர் அஹமட் தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :