ஓட்டமாவடி பாத்திமா பாலிகா தேசிய பாடசாலையில் இவ்வாண்டில் தரம் 6 இல் சேர்ந்துள்ள புதிய மாணவிகளை வரவேற்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் ஏ.எல்.அபுல் ஹஸன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிய மாணவிகளுக்கு பாடசாலை இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பி அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், ஏழாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிகளின் கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.யூ.எம்.இஸ்மாயில், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரியுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி, ஆசிரிய ஆலோசகர் ஏ.எல்.சலாம், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினரும் முன்னாள் தவிசாளருமான ஐ.ரீ.அஸ்மி, வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் கே.எல்.அஸ்மி மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இம்முறை குறித்த பாடசாலையில் தரம் 6 இல் இணைந்து கல்வி கற்க சுமார் 182 மாணவிகள் சேர்ந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் ஏ.எல்.அபுல் ஹஸன் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment